Sunday, November 11, 2012

காதலர் தினம் – என்ன விலையழகே


படம் : காதலர் தினம்
பாடல் : என்ன விலையழகே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : உன்னி மேனன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்ன விலையழகே…
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
படைத்தான் இறைவன் உனையே மலைத்தான் உடனே அவனே
அழகைப் படைக்கும் திறமை முழுக்க
உன்னுடன் சார்ந்தது என் விழி சேர்ந்தது
விடிய விடிய மடியில் கிடக்கும்
பொன் வீணை உன் மேனி மீட்டட்டும் என் மேனி
விரைவினில் வந்து கலந்திடு விரல்பட மெல்லக் கனிந்திடு
உடல் மட்டும் இங்கு கிடக்குது உடன் வந்து நீயும் உயிர் கொடு
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
பல்லவன் சிற்பிகள் அன்று பண்ணிய சிற்பத்தில் ஒன்று
பெண்ணென வந்தது இன்று சிலையே
உந்தன் அழகுக்கில்லை ஈடு
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தருவேன்
இந்த அழகைக்கண்டு வியந்து போகிறேன் ஓ
ஒரு மொழியில்லாமல்
ஒரு மொழியில்லாமல் மௌனமாகிறேன்
உயிரே உனையே நினைந்து விழிநீர் மழையில் நனைந்து
இமையில் இருக்கும் இரவு உறக்கம்
கண் விட்டுப் போயாச்சு காரணம் நீயாச்சு
நிலவு எரிக்க நினைவு கொதிக்க
ஆராத நெஞ்சாச்சு ஆகாரம் நஞ்சாச்சு
தினம் தினம் உனை நினைக்கிறேன் துரும்பென உடல் இளைக்கிறேன்
உயிர் கொண்டு வரும் பதுமையே உனைவிட இல்லை புதுமையே
உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல உயிரே
உன் புகழ் வையமும் சொல்ல சிற்றன வாசலில் உள்ள
சித்திரம் வெட்குது மெல்ல
நல்ல நாள் உனைச் சேரும் நாள்தான்
என்ன விலையழகே …
என்ன விலையழகே சொன்ன விலைக்கு வாங்க வருவேன்
விலை உயிரென்றாலும் தர

கோவா – இதுவரை இல்லாத


படம் : கோவா
பாடல் : இதுவரை இல்லாத
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: கங்கை அமரன்
பாடியவர்கள் : அஜீஸ், ஆண்ட்ரே
இதுவரை இல்லாத உணர்விது
இதயதில் உண்டான கனவிது
பலித்திடும் அன்னாளை தேடிடும் பாடல் கேட்டாயோ (2)
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே (2)
-
இங்கே ஒரு இன்பம் வந்து நிறைய
எப்போது என் உண்மை நிலை அறிய
தாங்காமலும் தூங்காமலும் நாள் செல்லுதே
இல்லாமலே நித்தம் வரும் கனவு
கொல்லாமல் கொல்ல
சுகம் என்னென்று சொல்ல
நீ துணை வர வேண்டும்
நீண்ட வழி என் பயணம்
-
அங்கே அங்கே வந்து வந்து கலக்கும்
வெண் மேகமும் வெண் நிலவும் போல
என் தன் மன எண்ணங்களை யார் அறிவார்
என் நெஞ்மோ உன் போல அல்ல
ஏதோ ஓர் மாற்றம் நிலை புரியாத தோற்றம்
இது நிறந்தரம் அல்ல மாறிவிடும் மன நிலை தான் !
-
மனதிலே உள்ளூரும் உணர்வுகள்
மலர்ந்ததே மொட்டண உறவுகள்
திறந்ததே தன்னாலே கதவுகள் நமக்கு முன்னாலே (2)
தேகம் இப்போது உணர்ந்தது
தென்றல் என் மீது படர்ந்தது
மோகம் முன்னேறி வருகுது முன்னே (2

யாரடி நீ மோகினி – எங்கேயோ பார்த்த


படம் : யாரடி நீ மோகினி
பாடல் : எங்கேயோ பார்த்த
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா. முத்துகுமார்
பாடியவர்கள் : கார்த்திக், நவீன், உதித் நாராயணன்
Can you feel her
is your heart speaking to her
can you feel the love
yes
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
இன்னும் கண்கள் திறக்காத சிற்பம்
ஒரு கோடி பூ பூக்கும் வெட்கம்
ஆண் மனதை அழிக்க வந்த சாபம்
அறிவை மயக்கும் மாய தாகம்
இவளை பார்த்த இன்பம் போதும்
வாழ்ந்து பார்க்க நெஞ்சம் ஏங்கும்
-
கனவுகளில் வாழ்ந்த நாளை கண் எதிரே பார்க்கிறேன்
கதைகளிலே கேட்ட பெண்ணாய் திரும்பி திரும்பி பார்க்கிறேன்
அங்கும் இங்கும் ஓடும் கால்கள் அசைய மறுத்து வேண்டுதே
இந்த இடத்தில் இன்னும் நிற்க இதயம் கூட ஏங்குதே
என்னானதோ ஏதானதோ
கண்ணாடிபோல் உடைந்திடும் மனது
கவிதை ஒன்று பார்க்க போக
கண்கள் கலங்கி நானும் ஏங்க
மழையின் சாரல் என்னை தாக்க
விடைகள் இல்லா கேள்வி கேட்க
எங்கேயோ பார்த்த மயக்கம்
எப்போதோ வாழ்ந்த நெருக்கம்
தேவதை இந்த சாலை ஓரம்
வருவது என்ன மாயம் மாயம்
கண் திறந்து இவள் பார்க்கும் போது
கடவுளை இன்று நம்பும் மனது
-
ஆதி அந்தமும் மறந்து உன் அருகில் கறைந்து நான் போனேன்
ஆண்கள் வெட்கபடும் தருணம் உன்னை பார்த்த பின்பு நான் கண்டு கொண்டேன்
இடி விழுந்த வீட்டில் இன்று பூ செடிகள் பூக்கிறதே
இவள்தானே உந்தன் பாதி கடவுள் பதில் கேட்கிறதே
வியந்து வியந்து உடைந்து உடைந்து
சரிந்து சரிந்து மிரண்டு மிரண்டு
இந்த நிமிடம் மீண்டும் பிறந்து
உனக்குள் கலந்து தொலைந்து தொலைந்து

7G ரெயின்போ காலணி – நினைத்து நினைத்து


படம் : 7G ரெயின்போ காலணி
பாடல் : நினைத்து நினைத்து
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா. முத்துகுமார்
பாடியவர்கள் : ஷ்ரேயா கௌஷல்
நினைத்து நினைத்து பார்த்தேன்
நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எரியும் கடிதம் எதற்கு பெண்ணே?
உன்னால் தானே னானே வாழ்கிறேன் ஓ
உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா?
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன்?
உடைந்து போன வளையல் பேசுமா?
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்
விரல்கள் இன்று எங்கே?
தோளில் சாய்ன்து கதைகள் பேச
முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடியும் முன்னமே
தூக்கம் கலைந்ததே (நினைத்து நினைத்து…)
பேசி போன வார்தைகள் எல்லாம்
காலம் தோறும் காதினில் கேட்கும்
சாம்பல் கறையும் வார்த்தை கறையுமா?
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா?
தொடர்ந்து வந்த நிழல்கள் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன் நானும்…

7G ரெயின்போ காலனி – கண் பேசும்


படம் : 7G ரெயின்போ காலனி
பாடல் : கண் பேசும்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா. முத்துகுமார்
பாடியவர்கள் : கார்த்திக்
கண் பேசும் வார்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை,
கடல் கை கூடி மறைவதில்லை
கண்ணாடி இதயம் இல்லை,
கடல் கை மூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை
ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண் பேசும் வார்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை,
கடல் கை மூடி மறைவதில்லை

காட்டிலே காயும் நிலவு, கண்டு கொள்ள யாரும் இல்லை
கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம் பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி, வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே
நுரைகள் மற்றும் கரைக்கே சொந்தமடி

கண் பேசும் வார்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை,
கடல் கை மூடி மறைவதில்லை

உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மற்றும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்கள் எல்லாம்
அட புடவை கட்டி பெண் ஆனது
ஹே புயல் அடித்தால், மலை இருக்கும்
மரங்களும் பூக்களும் மறைந்துவிடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்

ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண் பேசும் வார்தை
கண் பேசும் வார்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறு முகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை,
கடல் கை மூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள்மனம் மறப்பதில்லை

தீனா – நீ இல்லை


படம் : தீனா
பாடல் : நீ இல்லை
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன், பவதரணி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே,
உன் முகம் பார்த்து,
சூரியன் சிரித்து எழுந்ததிங்கே,
ஓ காதல் என்றாலும்,
அவ்வார்த்தை பொல்லாது,
அவ்வார்த்தை போல் என்னை,
கூர் வாளும் கொல்லாது,
ஓ…
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே,
உன் முகம் பார்த்து,
சூரியன் சிரித்து எழுந்ததிங்கே,
ஓ காதல் என்றாலும்,
அவ்வார்த்தை பொல்லாது,
அவ்வார்த்தை போல் என்னை,
கூர் வாளும் கொல்லாது,
ஓ…
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே-ஏ-ஏ,
அன்பே அன்பே உன் ஆடை என்று,
என்னை ஏற்றால் என்ன உன் இடையில் இன்று,
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே,
—-
நடு ராத்திரியில் சிறு பூத்திரியில்,
ஒளி நடனமாடும் பொழுது,
ஒரு ஏடும் இல்லாமல் எழுத்தும் இல்லாமல்,
பாடல் நூறு எழுது,
என் மௌனம் அதை சொல்லும் சொல்லும்,
உன் உள்ளம் அதை மெல்லும் மெல்லும்,
நடு சாமம் அது செல்லும் செல்லும்,
மலர் வானம் நம்மை கொல்லும் கொல்லும்,
நீ ஆவல் கொள்ளாது,
அடி அம்மாடி என்றும்,
அது காவல் கொள்ளாது,

நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே,
உன் முகம் பார்த்து,
சூரியன் சிரித்து எழுந்ததிங்கே,
அன்பே அன்பே உன் ஆடை என்று,
என்னை ஏற்றால் என்ன உன் இடையில் இன்று,
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே,
—-
நான் ஊர் மயங்கும் பல ஒவியத்தை,
என் கைகள் கொண்டு வரைந்தேன்,
உயிர் காதலனே உன் சித்திரத்தை,
என் கண்கள் கொண்டு வரைந்தேன்,
உன்னை போல ஒரு ஒவியத்தை,
ஹுசைன் கூட இங்கு வரைந்ததில்லை,
உன்னை பார்த்தால் அவன் மூச்சு முட்டும்,
மழை போல உடல் வேர்து கொட்டும்,
இந்த காதல் வந்தாலே,
அந்த ஹரிசந்திரன் கூட,
பல பொய்கள் சொல்வானே-ஏ-ஏ,

நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே,
உன் முகம் பார்த்து,
சூரியன் சிரித்து எழுந்ததிங்கே,
ஓ காதல் என்றாலும்,
அவ்வார்த்தை பொல்லாது,
அவ்வார்த்தை போல் என்னை,
கூர் வாளும் கொல்லாது,
ஓ…
அன்பே அன்பே உன் ஆடை என்று,
என்னை ஏற்றால் என்ன உன் இடையில் இன்று,
நீ இல்லை என்றால்,
வாழ்கையில் இல்லை வானவிலே,

தீனா – சொல்லாமல்


படம் : தீனா
பாடல் : சொல்லாமல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : ஷங்கர் மஹாதேவன், பவதரணி
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்,
ஒரு நாளைக்குள்ளே,
மெல்ல மெல்ல,
உன் மௌனம் என்னை,
கொல்ல கொல்ல,
இந்த காதலில் நான்,
காற்றில் பறக்கும்,
காகிதமானேன்,
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்,

ஓ, காதலின் அவஸ்தை,
எதிரிக்கும் வேண்டாம்,
நரக சுகம் அல்லவா,
நெருப்பை விழிங்கிவிட்டேன்,
ஓ அமிலம் அருந்திவிட்டேன்,
நோயாய் நெஞ்சில் நீ நுழைந்தாய்,
மருந்தை ஏனடி தர மறந்தாய்,
வாலிபத்தின் சோலையிலே,
ரகசியமாய் பூ பறித்தவள்,
நீ தானே…

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

பெண்களின் உள்ளம்,
படுக்குழி என்பேன்,
விழுந்து எழுந்தவன் யார்?
ஆழம் அளந்தவன் யார்?
கரையை கடந்தவன் யார்?
காதலில் இருக்கும் பயத்தினில் தான்,
கடவுள் பூமிக்கு வருவதில்லை,
மீறி அவன் பூமி வந்தால்,
தாடியோடதான் அலைவான்,
வீதியிலே,

சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்
ஒரு நாளைக்குள்ளே,
மெல்ல மெல்ல,
உன் மௌனம் என்னை,
கொல்ல கொல்ல,
இந்த காதலில் நான்,
காற்றில் பறக்கும்,
காகிதமானேன்
சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்,
என் காதல் தேவதையின் கண்கள்,
நெஞ்சத்தில் கொட்டி செல்லும் மின்னல்,
கண்ணோரம் மின்னும் அவள் காதல்

காதல் கொண்டேன் – நெஞ்சோடு


படம் : காதல் கொண்டேன்
பாடல் : நெஞ்சோடு
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே
ஒரு பார்வை பார்த்து நான் நின்றால்
சிறு பூவாக நீ மலர்வாயே
ஒரு வார்த்தை இங்கு நான் சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முக மூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றெங்கு என்னது
நதி நீரிலே அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா

நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீ தான் தலை கோத வந்தாலும்
உன் மடி மீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் நான் இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை

ஒரு பார்வை பார்த்து நீ நின்றால்
சிறு பூவாக நான் மலர்வேனே
ஒரு வார்த்தை இங்கு நீ சொன்னால்
வலி போகும் என் அன்பே அன்பே
நெஞ்சோடு கலந்திடு உறவாலே
காலங்கள் மறந்திடு அன்பே
நிலவோடு தென்றலும் வரும் வேளை
காயங்கள் மறந்திடு அன்பே

காதல் கொண்டேன் – தேவதையை கண்டேன்


படம் : காதல் கொண்டேன்
பாடல் :
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்
ஒரு வண்ணது பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இங்கு விரலோடு உள்ளது
தீக்குள்ளே விரல் வைத்தேன்
தனி தீவில் கடை வைத்தேன்
மணல் வீடு கட்டி வைத்தேன்
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்

தேவதை தேவதை தேவதை தேவதை
அவள் ஒரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை
அவள் ஒரு தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை தேவதை
விழி ஓரமாய் ஒரு நீர் துளி
வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால்
போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு நியாபகம்
அலை பாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால் சுவாசம் சூடேரிடும்
கல்லரை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலை போய் தான் சேராதே
எத்தனை காதல் எத்தனை ஆசை
தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவு உடைந்து போகுதே

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்

தோழியே ஒரு நேரத்தில்
தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய்
போகும் போகும் போகும்
சோளியாய் என்னை சுழற்றினாய்
சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கண்டேன்
கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்
எங்கு போவது என்ன ஆவது
எந்தன் வாழ்வும் தாழ்வும் உன்னை சேர்வது

தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்
ஒரு வண்ணது பூச்சி எந்தன் வழிதேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இங்கு விரலோடு உள்ளது
தீக்குள்ளே விரல் வைத்தேன்
தனி தீவில் கடை வைத்தேன்
மணல் வீடு கட்டி வைத்தேன்
தேவதையை கண்டேன் காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்
நெஞ்சுக்குள் நுழைந்தாள் மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்

3 – கண்ணழகா.. காலழகா


படம்: 3
இசை: அருனித்
பாடலாசிரியர்: தனுஷ்
பாடியவர்கள்: தனுஷ், ஸ்ருதி ஹாசன்
=======
கண்ணழகா.. காலழகா
பொன் அழகா.. பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா
உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி
அழகே அழகே உனை விட எதுவும்
அழகில் அழகாய் இல்லையடி
—-
எங்கேயோ பார்க்கிறாய் என்னெனென்ன சொல்கிறாய் எல்லைகள் தாண்டிட மாயம்கள் செய்கிறாய்
உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன்
உன் உயிர் சேர்ந்திட நான் வரை பார்க்கிறேன்
இதழும் இதழும் இணையட்டுமே புதிதாய் படிகள் இல்லை
இமைகள் மூடி அருகினில் வா
இதுபோல் எதுவும் இல்லை
உனக்குள் பார்க்கவா
உள்ளதை கேட்கவா
என் உயிர் சேர்ந்திட
ஓர் வழி சொல்லவா

கண்ணழகே.. பேரழகே
பெண்ணழகே.. என் அழகி
உயிரே உயிரே உனை விட எதுவும்
உயிரில் பெரிதாய் இல்லையடி

கழுகு – ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும்


படம்: கழுகு
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடலாசிரியர்: சினேகன்
பாடியவர்கள்: கிருஷ்ணராஜ், வேல்முருகன், சத்யன்

ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அதை காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்…
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்
அது எப்போதுமே போதையான நிலவரம்..
ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அதை காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்…
காதல் ஒரு கண்ணாமூச்சி கலவரம்
அது எப்போதுமே போதையான நிலவரம்..
அப்போ
ஆணும் பொண்ணும் ஒத்துமையா இருந்துச்சு
அது காதலுல உலகத்தையே மறந்துச்சு…
அது வாழ்ந்த போதிலும் இல்ல
இறந்த போதிலும்…
அது பிரிஞ்சதே இல்ல…
அது மறஞ்சதே இல்லை .
தினம் ஜோடி ஜோடியா
இங்க செத்துக் கிடைக்கும்டா..
அதை தூக்கும் போதெல்லாம்..
என் நெஞ்சு வலிக்கும் டா !

நீ சொல்லும் காதலெல்லாம் மலையேறி போச்சு சிக்கு
தும்பலபோல வந்து போகுது இந்த காதலு
காதலுன்னு சொல்லுறாங்க… கண்டபடி சுத்துறாங்க
தப்பு கொறஞ்சா… மப்பு கொறஞ்சா… தள்ளி போறாங்க
காதலெல்லாமே ஒரு கண்ணாம்பூச்சி
இதில் ஆணும் பெண்ணுமே தெனம் காணா போச்சு
காதலிலே தற்கொலைகள் கொறஞ்சே போச்சு
அட உண்மை காதலே…இல்ல சித்தப்பு
இங்க ஒருத்தன் சாவுறான்…ஆனா ஒருத்தன் வாழுறான்
அட என்னடா உலகம்… இதில் எத்தன கழகம்…இங்க காதலே பாவம்…இது யார் விட்ட சாபம்…

ஆம்பிளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்
அதை காதலுன்னு சொல்லுறாங்க அனைவரும்…
—-
இன்னைக்கு காதலெல்லாம்
ரொம்ப ரொம்ப மாறிடுச்சு…
கண்ணப் பாக்குது
கையக் கோக்குது
ரூமு கேக்குது….
எல்லாம் முடிஞ்ச பின்னும்
பிரெண்ட்டுனு சொல்லிக்கிட்டு
வாழுறவங்க ரொம்ப பேருடா
கேட்டுப்பாருடா !
 இப்போ காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்லை…
அட ஒன்னு  போயிட்டா ரெண்டு இருக்குது உள்ள…
இப்பெல்லாம் தேவதாசு எவனும் இல்ல …
அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குறான்
அவ செலவு பண்ணத்தான் ஒரு லூசு தேடுறா
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறா
ரொம்ப புளிச்சு போச்சுனா கை குலுக்கி பிரியுறா !!!
அவன் பொழுதுபோக்குக்கு ஒரு பிகர பாக்குறான்
அவ செலவு பண்ணத்தான் ஒரு லூசு தேடுறா
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறா
ரொம்ப புளிச்சு போச்சுனா கை குலுக்கி பிரியுறா !!!

Thursday, May 10, 2012

NATURE WALLPAPERS












Sunday, May 6, 2012

Mind Blowing Nature Photos !
























              *.*
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                (`*•.¸ (`*•.¸ ¸.•*´) ¸.•* )
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                       Heart Break Kid
             ..::¨`•.¸...::** **::...¸.•´¨::..
                .(¸.•* (¸.•*´ `*•.¸) *•.¸).
     __..)/.._________..)/.._ _..)/..________..)/..__
      ¯¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯ ¯""/(""¯¯¯¯¯¯¯¯""/(""¯
                     ˜*•. ˜*•.•*˜ .•*˜
                            *.*

Things Creatively Improved