நண்பர்
வா.மணிகண்டனின் வாலைப்பூவை மேய்ந்து கொண்டிருந்தபோது சில சுவாரசியமான தகவல்கள்
கிடைத்தது. மணி வளர்ந்து வரும் இளம்
எழுத்தாளர், ஆனால் அவருடய
எழுத்தைப் பார்த்தால் அப்படி ஒரு முதிர்ச்சி இருக்கும். கருத்துக்கள் மிகத்
தெளிவாக இருக்கும். மாணிகண்டனும்
வாசகர்களிடம் பணம் கேட்கிறார் ஆனால் அவர் சாருவைப்போல ரெமி மார்ட்டின்
குடிப்பதற்கு கேட்பதில்லை. நிசப்தம் அறக்கட்டளை ஆரம்பித்து தன்னால் முடிந்த வரை மக்களுக்கு
உதவி வருகிறார். அவருடய வாலைப்பூவை படித்த பிறகு தான் எழுத வேண்டும் என்கிற ஆர்வம்
எனக்கும் வந்திருக்கிறது. மணி எழுதிய லின்ட்செ லோகன் W/O மாரியப்பன் ஒரு அட்டகாசமான சிறுகதை தொகுப்பு. சென்ற முறை புத்தக கண்காட்சியில்
சாருவின் புத்தகங்கள் வாங்கியது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு. ஒரு மண்ணும்
புரியவில்லை. ஒரு வேலை மெத்த படித்த அறிவாளிகளுக்கு புரியுமோ என்னவோ. அவர் பெரிய
ஞாநியாகவே இருந்துவிட்டு போகட்டும். என்னை போன்ற சாமாணியர்களுக்கு புரியும்படி
எழுதும் மணி சாருவைய் விட எவ்வளோவோ மேலானவர். மணியின் கட்டுரையில்
ஒரு உதாரணம் கீழே. ஒரு பானை
சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
மணி ஒரு
பேராசியாருடன் உரையாடிய போது அவர் எழுப்பிய கேள்விகள். தமிழக மீனவர் பிரச்னை பற்றியது. ‘ஏன் இந்த மீனவர்களை அடிக்கடி இலங்கைக்காரன் பிடிச்சுட்டு போயிடுறான்?’ ராமேஸ்வரம் இலங்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறது அதனால் அந்த ஊர்
மீனவர்கள் தெரியாத்தனமாக எல்லை மீறிவிடுகிறார்கள் போலிருக்கிறது என்று தான் நானும் இத்தனை நாளும் நம்பிக்
கொண்டிருந்தேன். ‘ஏன் இலங்கை மீனவர்கள் தெரியாத்தனமாக
எல்லை மீறுவதே இல்லையா? அவர்களை ஏன் இந்தியா கைது செய்வதில்லை என்ற கேள்வி ஒரு நாளும் வந்தது இல்லை!!! தவறு முழுக்கவும் இலங்கையிடம். இந்தப் புரிதல் எந்தவிதத்திலும் சிதைந்துவிடக் கூடாது என்று தமிழகக் கட்சிகள் எண்ணெய் ஊற்றுகிறார்கள் என்பதுதான் நிதர்சனம்.
தமிழகக் கடலில் ஓடும் பெரும்பாலான
படகுகள் அரசியல்வாதிகளுடையது என்கிறார்கள். எல்லாவிதமான சட்டத்திற்கு புறம்பான வேலைகளையும் அந்தப் படகுகளின் மூலமாக செய்கிறார்களாம்.
போதைப் பொருள் கடத்தலிலிருந்து கட்டப்பஞ்சாயத்து வரை. சகலமும். இலங்கையின் கடல் எல்லைக்குள் சென்று
உலக அளவில் தடைசெய்யப்பட்ட முறைகளை
பயன்படுத்தி மீன் பிடிக்கிறார்கள். Destructive Fishing Practices என்று கூகிளில் தேடிப்பார்க்கலாம். அதில் ஒன்று Trawling. மிகப்பெரிய வலைகளை வீசி கடல் ஆழத்தில்
இருக்கும் மண்ணோடு சேர்த்து இழுத்துவிடுவார்கள். கடல்பாசி, முட்டை, குஞ்சு, குளுவான் என்று எதுவும் மிச்சம் ஆகாது. இப்படி அடியோடு அழித்துவிட்டு வந்தால் அந்த
நாட்டு மீனவன் என்ன செய்வான்? அதுதான் பிடித்து போடுகிறார்கள். உண்மையில் பிரச்சினை என்பது
சிங்களர்களுக்கும் தமிழருக்குமான பிரச்சினையில்லை. ஈழத்தமிழ் மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்குமான பிரச்சினைதான்.