அராத்து
ஆண் பெண் நட்பு / ஆண் பெண் காதல் இரண்டிலும் பொதுவான சில செயல்களை பார்த்து
நக்கல் அடிக்கும் நயவஞ்சகர்களுக்காக இந்த பதிவு. இரண்டிலும் பொதுவாக சில
வினைகள் இருந்தாலும், அவற்றிற்கிடையேயான மெல்லிய வேறுபாடுகளைப்
பட்டியலிடுவதே நோக்கம்.
(1)
காதல் : கட்டிப்பிடிக்கலாம், இறுக்கி கட்டிப்பிடிக்கலாம், மார்பகம்
என்ன பாடு பட்டாலும் பரவாயில்லை, கட்டிப்பிடிக்கும் போது பின் பக்கத்தில்
கூட கை வைத்துக்கொள்ளலாம்.
நட்பு : கட்டிப்பிடிக்கலாம், ஒரு மார்பகத்தின் மீது மட்டும் படலாம்,
ஒத்தடம் கொடுத்தது போல ஒத்தி எடுத்து விட வேண்டும், முதுகில் பட்டும்
படாமல் கை வைத்து எடுக்க வேண்டும்.
(2)
காதல் : எங்கு வேண்டுமானாலும் வகை தொகை இல்லாமல் முத்தம் கொடுக்கலாம், கடிக்கவும் செய்யலாம்.
நட்பு : கடிக்கக்கூடாது , நெற்றி, புறங்கை, உச்சந்தலை (பேனு, ஈறு
எல்லாம் வாயில் போகாமல்) போன்ற இடங்களில் முத்தமிடலாம், உதடு ட்ரையாக
இருக்க வேண்டும், ஓவராக எச்சில் படுத்தி விடக்கூடாது.
(3)
காதல் : எப்போது வேண்டுமானாலும் மடியில் உட்கார வைத்துக்கொள்ளலாம்.
நட்பு : பிளான் பண்ண வேண்டும். அல்லக்கை 3 பேரை வெட்டியாக
சேர்த்துக்கொண்டு ஆட்டோ பிடிக்க வேண்டும், முதலில் 3 பேரை உள்ளே அனுப்பி
விட்டு நாலாவதாக நாம் ஏறி தோழியை மடியில் உட்கார வைத்துக்கொள்ளலாம்,
இடுப்பையும் இந்த சந்தர்பத்தில் மட்டும் பிடிக்கலாம்.
(4)
காதல் : எந்த இடத்தில் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தொட்டுப்பார்த்து உவகை அடையலாம்.
நட்பு : ஒன்று சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க வேண்டும். ஜுரம்
அடிக்கையில் கழுத்தை தொடலாம். ஸ்கூட்டியில் இருந்து விழுந்து விட்டால் செம
ஜாலி, முட்டிக்கால் வரை தொட்டுப்பார்க்கலாம் - தொடையெல்லாம் நட்பின் ஆழத்தை
பொறுத்தது. சாலையை கடக்கையில் கையை தொடலாம் (முன்ன பின்ன அவ சாலையை
கடந்ததே இல்லை பாவம்). பீச்சிற்கு அழைத்து சென்று இடுப்பளவு ஆழத்தில்
விளையாடும் அளவிற்கு சென்றால், ஐயோ சக்க ஜாலி, காதலனே தொட்டறியாத சகல
இடங்களையும் பரிச்சயம் செய்து கொள்ளலாம்.
ரொம்ப தில் இருப்பவர்கள், என்னா வயிறு ஒரு மாதிரி வீங்கி இருக்கு என வயிறை
தொடுவார்கள். உதட்டில் சாம்பார் என உதட்டை தொடலாம்.
(5)
காதல் : மடியில் தலை வைத்து படுக்க எந்த தடையும் இல்லாதிருந்தும் வேறு பல சுவாரசியங்கள் இருப்பதால் இந்த ஏரியா இங்கு டல்.
நட்பு : மடியில் தலை வைத்து படுக்கலாம். நேக்காக செய்ய வேண்டும்.
கும்பலாக இருக்கும் போது ஆரம்பித்து, போக போக தனியாக இருக்கையிலும்
செய்யலாம்.
(6)
காதல் : செக்ஸ் ஜோக் அடிகக்லாம்.
நட்பு : செக்ஸ் ஜோக் மட்டுமே அடிக்கவேண்டும். கெட்ட வார்த்தை மட்டும் தவிர்க்க வேண்டும்.
(7)
காதல் : லவ் யூ தங்கம், மிஸ் யூ செல்லம் சொல்லலாம்.
நட்பு : லவ் யூ / மிஸ் யூ மட்டும் சொல்லலாம். நக்கலாக தங்கம் / செல்லம் என்றெல்லாம் தைரியமாக உபயோகிப்பவர்களும் உள்ளனர்.
(8)
காதல் : ஒரே பெட்டில் படுத்து கட்டி பிடித்து... தூங்கி விடலாம்.
நட்பு : ஒரே பெட்டில் படுத்து, தூக்கமே வரலை என வயிறெறிந்து கொண்டே
கொட்ட கொட்ட விழித்திருக்க வேண்டும். தலை வலிக்குது என மேலே சாய்ந்து
கொள்ளலாம்.
(9)
காதல் : எதிர் பாராமல் ந்யூடாக பார்த்து விட்டால், ஓடி கட்டிப்பிடித்துக் கொள்ளலாம்.
நட்பு : ஐ யாம் சாரி என சொல்லி விட்டு சோளக்கொல்லை பொம்மை போல
நின்று கொண்டிருக்க வேண்டும். பின் தினமும் அதை சொல்லி சொல்லி சாரி கேட்டு
ஆழம் பார்க்கலாம்.
(10)
நட்பு : அடிக்கடி என்னா சொன்னாலும் பாராட்டுவதற்காக கையை காட்டு என
சொல்லி ஒரு அடி அடிக்கணும். ரெகுலர் பாடி டச் இருக்கணும் என்பதற்கான
பயிற்சி இது. இறுக்கி கட்டி புடிச்சி உருளனும்னா அதுக்கும்
வழி இருக்கு: எதாவது அவளோட பொருளை (மொபைலை, கைப்பையை) அவள் பார்க்கும்
போதே எடுத்து கொண்டு ஓட வேண்டும் (மெதுவாக). அவள் துரத்தி கொண்டு வந்து
உஙக்ளை பிடிப்பாள். பின் நீங்கள் கீழே விழ வேண்டும். அவளும் விழுந்து
உங்கள் மேல் ஏறி அதை பிடுங்க முயற்சிப்பாள். பொருளை கொடுக்காத வரை
ஆவாரம்பூ வினீத் போல உருண்டு புரளலாம். சில அவசரக்குடுக்கைகள் இந்த
நேரத்தில் முத்தம் கொடுத்து நட்பை கேள்விக்குறி ஆக்கிக்கொள்வதும் உண்டு.
போரடிக்குது. எனக்கே காதல், நட்பு குழம்பி போச்சு. இதோட நிறுத்திக்கிறேன்.
******
நன்றி :
அராத்துவின் ஃபேஸ்புக் பக்கம்