Monday, June 26, 2017

சண்ட கோழி

படம் : ஆயுத எழுத்து
பாடல் :
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், சதனா ஷர்கம்
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
கைய வெச்ச நெஞ்சுகுள்ளெ கய்ய முய்யா
நீ ரெண்டும் முழத்துல பாய போடைய்யா
சண்டை வந்துச்ச தள்ளி படுமைய்யா
ரெண்டும் முழத்துல பாய போடைய்யா
சண்டை வந்துச்ச தள்ளி படுமைய்யா
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா ஆஹ்
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா ஆஹ்
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா

வாங்கி போட்டேன் வெத்தலை, செவக்கலை சாமி
வாயி முத்தம் குடுத்த, செவந்திடும் சாமி
சொர்க்கபுரம் போவோனும், நல்ல வழி காமி
ஓ ஒட்டுகின்னு மேனி, தொடங்கட்டும் உறவு
வட்டி கட போலே, வளரட்டும் வயிரு

கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா ஆ
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
கைய வெச்ச நெஞ்சுகுள்ளெ கய்ய முய்யா

மச்சு வீடு வேணாம்
மெட்டு கட்டு போதும்
மெத்தையேதும் வேணாம்
ஒத்த பாயி போதும்
மூக்குத்தியின் பொன் கீத்து
ராத்திரிக்கு போதும்
ஓ.. சைவ முத்தம் கொடுத்த
ஒத்து போக மாட்டேன்
சாகசத்த காட்டு
செத்து போக மாட்டேன்

கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா ஆஹ்
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
கைய வெச்ச நெஞ்சுகுள்ளெ கய்ய முய்யா
நீ ரெண்டும் முழத்துல பாய போடைய்யா
சண்டை வந்துச்ச தள்ளி படுமைய்யா
ரெண்டும் முழத்துல பாய போடைய்யா
சண்டை வந்துச்ச தள்ளி படுமைய்யா
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா ஆஹ்
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா ஆஹ்
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா

பூவுக்குள் - ஜீன்ஸ்

படம் : ஜீன்ஸ்
பாடல் : பூவுக்குள்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நருவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயம்
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற
தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருல்லதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
பெண்பால் கொண்ட சிறுதீவு இரு கால்கொண்டு
நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும்ப்
பூவே நீ எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெரிக்கும் கண்ணம்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற க்ரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்

காதலன் – என்னவளே

படம் : காதலன்
பாடல் : என்னவளே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று
கழுத்து வரை இன்று காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று
வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும்
உருலுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும்
தோன்றுதடி – இது
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி – நான்
வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி…
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக்
கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூங்தலில்
மீன் பிடிப்பேன்
வென்னிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு
சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி
அனுப்பிவைப்பேன் – என்
காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் – உன்
காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்றுரைப்பேன்…
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்

Saturday, June 24, 2017

மனமுதிர்ச்சி

ஒரு கட்டத்தில் என்ன நடந்தாலும் ''போகட்டும் விடு''ன்ற மனசுசெத்த நிலை வரும்.. அதற்கு பெயரை மனமுதிர்ச்சி எனச்சொல்லிக்கொள்கிறார்கள்.

Friday, June 23, 2017

பக்குவப்பட்ட காதல்

பக்குவப்பட்ட காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை.. பக்குவப்பட்டால் காதல் ஏன் வரப்போகிறது!

Sunday, June 18, 2017

நான்

எனக்கு
யாருமில்லை
நான் கூட.........

சில சிந்தனைகள்

எல்லா௫ம்
எல்லாமும்
பெற வேண்டும்.

எனக்கு மட்டும்
சற்று கூடுதலாக