எப்போதும் அவர்களுக்கு உங்களை புரியவே போவதில்லை என்று நன்றுதெரிந்தும், இருக்கும் வரைக்கும் உடனிருக்கச்செய்யும் மாயம் காதல்
யாருக்கும் ஆறுதலாக தலை சாய தோள் கொடுக்காதிர்கள். திடீரென்று அவர்கள் தோளை மாற்றிவிடுவார்கள். சாயாதோளின் வெறுமை நம்மை வதைக்கும்.
உன் பேச்சிலும் செயலிலும் சற்றுமுன் இல்லாத அழகியல் தென்படுகிறது. உன்னை நான் கவனிப்பதைக் கவனித்துவிட்டாய்தானே நீ
சமயங்களில், எதுவும் பேசாமல் வெறுமனே உன்னருகில் இருப்பதே போதுமானதாக இருக்கிறது!
உங்களால் மட்டுமே ஆகவேண்டிய காரியம் ஏதேனுமொன்றை மிச்சம் வைத்துவிட்டுத் தொலையுங்கள் இல்லையென்றால் நீங்கள் தேடப்படப்போவதில்லை.
தவிர்க்கமுடிந்தும்
தவிர்க்கவிரும்பாதது
உன் நினைவைத்தான்,
இருளைப் போக்க
விளக்கை ஏற்றுதல்
விடியல் ஆகாது -
என்று நன்றறிந்தும்.
இடையூறாக இருக்கிறோம் என்றறிந்த அடுத்த கணமே விலகி நிற்கத்தெரியவில்லை என்றால், இதுகாறும் பழகியபழக்கமும் புரிந்தபுரிதலும் விழலுக்கு இறைத்த நீரே
நான்கு கோடி அணுக்களை ஏமாற்றி தப்பிப்பிழைத்து உருக்கொண்டு பிறந்து வந்ததெல்லாம் பற்றற்று இருப்பதற்கா! முடியாது புத்தா.
நீங்கள் மிகநெருங்கியவராக நினைப்பவரும் அதே போலயே பிறிதொருவரை நினைத்துக்கொண்டிருப்பார். #முடிவிலிக்கோட்பாடு
ஒட்டுமொத்த பெண்ணினத்தையும் தேவதைகளாகவும் அல்லது பிசாசுகளாகவும் தோன்றவைப்பது மனதிற்கினிய ஒரேயொரு பெண்தான்
நீங்கள் அடிக்கடி கவனிக்கப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டுமெனில் எதிரியாக, துரோகியாக, இருந்தால் மட்டுமே சாத்தியம். அன்பு கவனிப்பாரற்றது.
செத்தபிறகு உங்கள் மனதில் வாழ்ந்தென்ன பிரயோசனம்? இப்போது இங்குதான் இருக்கிறேன்.!
நாம் விலகி நிற்கிறோம் என்பதை நாமாகவே உணர்த்தும் வரைக்கும் கண்டுகொள்ளாத நபர்களையே நெருக்கமானவர்கள் என்றிருந்தோம்
மார்புக்குழித்தெரிய ஆடையுடுத்தும் பெண்ணின் கண்பார்த்து பேசுவதே போதுமானதாயிருக்கிறது அவள்தன் கர்வம் உடைந்துபோக.
அகில உலக அழகியாக வேண்டுமானாலும் இருந்துகொள், எனக்குப்பிடித்தால் மட்டுமே நீ தேவதை!
என் நோக்கம் உன்னை அடைவதல்ல,
உன்னில் தொலைதல்!
என் நோக்கம் உன்னை அடைவதல்ல,
உன்னில் தொலைதல்!
அன்பின் அறியாமை யாதெனில்
;நீ ஏன் இப்படி செய்தாய்?' என காயப்படுத்தியவர்களிடமே ஆறுதல் தேடுவது!