Monday, June 26, 2017

சண்ட கோழி

படம் : ஆயுத எழுத்து
பாடல் :
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : ஏ.ஆர்.ரஹ்மான், சதனா ஷர்கம்
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
கைய வெச்ச நெஞ்சுகுள்ளெ கய்ய முய்யா
நீ ரெண்டும் முழத்துல பாய போடைய்யா
சண்டை வந்துச்ச தள்ளி படுமைய்யா
ரெண்டும் முழத்துல பாய போடைய்யா
சண்டை வந்துச்ச தள்ளி படுமைய்யா
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா ஆஹ்
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா ஆஹ்
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா

வாங்கி போட்டேன் வெத்தலை, செவக்கலை சாமி
வாயி முத்தம் குடுத்த, செவந்திடும் சாமி
சொர்க்கபுரம் போவோனும், நல்ல வழி காமி
ஓ ஒட்டுகின்னு மேனி, தொடங்கட்டும் உறவு
வட்டி கட போலே, வளரட்டும் வயிரு

கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா ஆ
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
கைய வெச்ச நெஞ்சுகுள்ளெ கய்ய முய்யா

மச்சு வீடு வேணாம்
மெட்டு கட்டு போதும்
மெத்தையேதும் வேணாம்
ஒத்த பாயி போதும்
மூக்குத்தியின் பொன் கீத்து
ராத்திரிக்கு போதும்
ஓ.. சைவ முத்தம் கொடுத்த
ஒத்து போக மாட்டேன்
சாகசத்த காட்டு
செத்து போக மாட்டேன்

கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா ஆஹ்
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா
சண்ட கோழி கோழி இவ சண்ட கோழி
கொஞ்சம் தடவு தடவு இவ சொந்த கோழியா
கைய வெச்ச நெஞ்சுகுள்ளெ கய்ய முய்யா
நீ ரெண்டும் முழத்துல பாய போடைய்யா
சண்டை வந்துச்ச தள்ளி படுமைய்யா
ரெண்டும் முழத்துல பாய போடைய்யா
சண்டை வந்துச்ச தள்ளி படுமைய்யா
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா ஆஹ்
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா ஐய்யா ஆஹ்
கொஞ்சநேரம் என்ன கொல்லைய்யா

பூவுக்குள் - ஜீன்ஸ்

படம் : ஜீன்ஸ்
பாடல் : பூவுக்குள்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : சுஜாதா, உன்னி கிருஷ்ணன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
ஒரு வாசமில்லாக் கிளையின் மேல்
நருவாசமுள்ள பூவைப்பார் பூவாசம் அதிசயமே
அலைக்கடல் தந்த மேகத்தில் சிறு
துளிக்கூட உப்பில்லை மழை நீரும் அதிசயம்
மின்சாரம் இல்லாமல் மிதக்கின்ற
தீபம்போல் மேனி கொண்ட மின்மினிகள் அதிசயமே
உடலுக்குள் எங்கே உயிருல்லதென்பதும்
உயிருக்குள் காதல் எங்குள்ளதென்பதும்
நினைத்தால் நினைத்தால் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்
பெண்பால் கொண்ட சிறுதீவு இரு கால்கொண்டு
நடமாடும் நீதான் என் அதிசயமே
உலகில் ஏழல்ல அதிசயங்கள் வாய்பேசும்ப்
பூவே நீ எட்டாவததிசயமே
வான் மிதக்கும் உன் கண்கள்
தேன் தெரிக்கும் கண்ணம்கள்
பால் குடிக்கும் அதரங்கள் அதிசயமே
நங்கைகொண்ட விரல்கள் அதிசயமே
நகம் என்ற க்ரீடம் அதிசயமே
அசையும் வளைவுகள் அதிசயமே
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்
பூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துழை செல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீ எந்தன் அதிசயம்

காதலன் – என்னவளே

படம் : காதலன்
பாடல் : என்னவளே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று
கழுத்து வரை இன்று காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று
வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும்
உருலுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும்
தோன்றுதடி – இது
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி – நான்
வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி…
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக்
கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூங்தலில்
மீன் பிடிப்பேன்
வென்னிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு
சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி
அனுப்பிவைப்பேன் – என்
காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் – உன்
காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்றுரைப்பேன்…
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்

Saturday, June 24, 2017

மனமுதிர்ச்சி

ஒரு கட்டத்தில் என்ன நடந்தாலும் ''போகட்டும் விடு''ன்ற மனசுசெத்த நிலை வரும்.. அதற்கு பெயரை மனமுதிர்ச்சி எனச்சொல்லிக்கொள்கிறார்கள்.

Friday, June 23, 2017

பக்குவப்பட்ட காதல்

பக்குவப்பட்ட காதல் என்ற ஒன்று இல்லவே இல்லை.. பக்குவப்பட்டால் காதல் ஏன் வரப்போகிறது!

Sunday, June 18, 2017

நான்

எனக்கு
யாருமில்லை
நான் கூட.........

சில சிந்தனைகள்

எல்லா௫ம்
எல்லாமும்
பெற வேண்டும்.

எனக்கு மட்டும்
சற்று கூடுதலாக

Monday, May 29, 2017

அவளும் நானும்

 அச்சம் என்பது மடமையடா - அவளும் நானும் அமுதும்
அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்

அவளும் நானும்
தவமும் அருளும்
அவளும் நானும்
வேரும் மரமும்

ஆளும் நிழலும்
அசைவும் நடிப்பும்
அணியும் பணிவும்
அவளும் நானும்

அவையும் துணிவும்
உழைப்பும் தழைப்பும்
அவளும் நானும்
அளித்தாலும் புகழும்

மீனும் புனலும்
விண்ணும் விரிவும்
வெற்பும் தோற்றமும்
வேலும் கூறும்

ஆறும் கரையும்
அம்பும் வில்லும்
பாட்டும் உறையும்
நானும் அவளும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

நானும் அவளும்
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்

அவளும் நானும்
தேனும் இனிப்பும்
அவளும் நானும்
சிரிப்பும் மகிழ்வும்

அவளும் நானும்
திங்களும் குளிரும்
அவளும் நானும்
கதிரும் ஒளியும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அலையும் கடலும்

அவளும் நானும்
அமுதும் தமிழும்
அவளும் நானும்
அமுதும் தமிழும்

Sunday, February 5, 2017

முன்னாள் காதலிகள்

முன்னாள் காதலிகள்


சொல்லக் கூடாத பொழுதொன்றில் தொடங்கினேன்
எனக்குப் பத்துப் பெண்குழந்தைகள் வேண்டும்
முன்னாள் காதலிகள் பெயர்களை வைக்கவென
மனதிற்குள் சேர்த்துக்கொண்டேன்.
எனக்கு ஆண்குழந்தைதான் வேண்டும்
அதுவும் ஐந்து என அவள் சொல்கையில்
மெதுவாய் முழிக்கிறது ஒரு மிருகம்.

- லதாமகன்

நன்றி: நவீன விருட்சம்

ஆண் - பெண் : காதல் Vs நட்பு

 
அராத்து

ஆண் பெண் நட்பு / ஆண் பெண் காதல் இரண்டிலும் பொதுவான சில செயல்களை பார்த்து நக்கல் அடிக்கும் நயவஞ்ச‌கர்களுக்காக இந்த பதிவு. இரண்டிலும் பொதுவாக சில வினைகள் இருந்தாலும், அவற்றிற்கிடையேயான மெல்லிய வேறுபாடுகளைப் பட்டியலிடுவதே நோக்கம்.

(1)
காதல் : கட்டிப்பிடிக்கலாம், இறுக்கி கட்டிப்பிடிக்கலாம், மார்பகம் என்ன பாடு பட்டாலும் பரவாயில்லை, கட்டிப்பிடிக்கும் போது பின் பக்கத்தில் கூட கை வைத்துக்கொள்ளலாம்.
நட்பு : கட்டிப்பிடிக்கலாம், ஒரு மார்பகத்தின் மீது மட்டும் படலாம், ஒத்தடம் கொடுத்தது போல ஒத்தி எடுத்து விட வேண்டும், முதுகில் பட்டும் படாமல் கை வைத்து எடுக்க வேண்டும்.

(2) 
காதல் : எங்கு வேண்டுமானாலும் வகை தொகை இல்லாமல் முத்தம் கொடுக்கலாம், கடிக்கவும் செய்யலாம்.
நட்பு : கடிக்கக்கூடாது , நெற்றி, புறங்கை, உச்சந்தலை (பேனு, ஈறு எல்லாம் வாயில் போகாமல்) போன்ற இடங்களில் முத்தமிடலாம், உதடு ட்ரையாக இருக்க வேண்டும், ஓவராக எச்சில் படுத்தி விடக்கூடாது.

(3)
காதல் : எப்போது வேண்டுமானாலும் மடியில் உட்கார வைத்துக்கொள்ளலாம்.
நட்பு : பிளான் பண்ண வேண்டும். அல்ல‌க்கை 3 பேரை வெட்டியாக சேர்த்துக்கொண்டு ஆட்டோ பிடிக்க வேண்டும், முதலில் 3 பேரை உள்ளே அனுப்பி விட்டு நாலாவதாக நாம் ஏறி தோழியை மடியில் உட்கார வைத்துக்கொள்ளலாம், இடுப்பையும் இந்த சந்தர்பத்தில் மட்டும் பிடிக்கலாம்.

(4)
காதல் : எந்த இடத்தில் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் தொட்டுப்பார்த்து உவகை அடையலாம்.
நட்பு : ஒன்று சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க வேண்டும். ஜுரம் அடிக்கையில் கழுத்தை தொடலாம். ஸ்கூட்டியில் இருந்து விழுந்து விட்டால் செம ஜாலி, முட்டிக்கால் வரை தொட்டுப்பார்க்கலாம் - தொடையெல்லாம் நட்பின் ஆழத்தை பொறுத்தது. சாலையை கடக்கையில் கையை தொடலாம் (முன்ன பின்ன அவ சாலையை கடந்ததே இல்லை பாவம்). பீச்சிற்கு அழைத்து சென்று இடுப்பளவு ஆழத்தில் விளையாடும் அளவிற்கு சென்றால், ஐயோ சக்க ஜாலி, காதலனே தொட்டறியாத சகல இடங்களையும் பரிச்சயம் செய்து கொள்ளலாம். ரொம்ப தில் இருப்பவர்கள், என்னா வயிறு ஒரு மாதிரி வீங்கி இருக்கு என வயிறை தொடுவார்கள். உதட்டில் சாம்பார் என உதட்டை தொடலாம்.

(5)
காதல் : மடியில் தலை வைத்து படுக்க எந்த தடையும் இல்லாதிருந்தும் வேறு பல சுவாரசியங்கள் இருப்பதால் இந்த ஏரியா இங்கு டல்.
நட்பு : மடியில் தலை வைத்து படுக்கலாம். நேக்காக செய்ய வேண்டும். கும்பலாக இருக்கும் போது ஆரம்பித்து, போக போக தனியாக இருக்கையிலும் செய்யலாம்.

(6)
காதல் : செக்ஸ் ஜோக் அடிகக்லாம்.
நட்பு : செக்ஸ் ஜோக் மட்டுமே அடிக்கவேண்டும். கெட்ட வார்த்தை மட்டும் தவிர்க்க வேண்டும்.

(7)
காதல் : லவ் யூ தங்கம், மிஸ் யூ செல்லம் சொல்லலாம்.
நட்பு : லவ் யூ / மிஸ் யூ மட்டும் சொல்லலாம். நக்கலாக தங்கம் / செல்லம் என்றெல்லாம் தைரியமாக உபயோகிப்பவர்களும் உள்ளனர்.

(8)
காதல் : ஒரே பெட்டில் படுத்து கட்டி பிடித்து... தூங்கி விடலாம்.
நட்பு : ஒரே பெட்டில் படுத்து, தூக்கமே வரலை என வயிறெறிந்து கொண்டே கொட்ட கொட்ட விழித்திருக்க வேண்டும். தலை வலிக்குது என மேலே சாய்ந்து கொள்ளலாம்.

(9)
காதல் : எதிர் பாராமல் ந்யூடாக பார்த்து விட்டால், ஓடி கட்டிப்பிடித்துக் கொள்ளலாம்.
நட்பு : ஐ யாம் சாரி என சொல்லி விட்டு சோளக்கொல்லை பொம்மை போல நின்று கொண்டிருக்க வேண்டும். பின் தினமும் அதை சொல்லி சொல்லி சாரி கேட்டு ஆழம் பார்க்கலாம்.

(10)
நட்பு : அடிக்கடி என்னா சொன்னாலும் பாராட்டுவதற்காக கையை காட்டு என சொல்லி ஒரு அடி அடிக்கணும். ரெகுலர் பாடி டச் இருக்கணும் என்பதற்கான பயிற்சி இது. இறுக்கி கட்டி புடிச்சி உருளனும்னா அதுக்கும் வழி இருக்கு: எதாவது அவளோட பொருளை (மொபைலை, கைப்பையை) அவள் பார்க்கும் போதே எடுத்து கொண்டு ஓட வேண்டும் (மெதுவாக). அவள் துரத்தி கொண்டு வந்து உஙக்ளை பிடிப்பாள். பின் நீங்கள் கீழே விழ வேண்டும். அவளும் விழுந்து உங்கள் மேல் ஏறி அதை பிடுங்க முயற்சிப்பாள். பொருளை கொடுக்காத வரை ஆவாரம்பூ வினீத் போல உருண்டு புரளலாம். சில அவசரக்குடுக்கைகள் இந்த நேரத்தில் முத்தம் கொடுத்து நட்பை கேள்விக்குறி ஆக்கிக்கொள்வதும் உண்டு.

போரடிக்குது. எனக்கே காதல், நட்பு குழம்பி போச்சு. இதோட நிறுத்திக்கிறேன்.

******

நன்றி : அராத்துவின் ஃபேஸ்புக் பக்கம்