Monday, January 27, 2014

இந்தமுறை வாங்கிய முக்கிய 20 புத்தகங்கள் :-

இந்தமுறை வாங்கிய முக்கிய 20 புத்தகங்கள் :-

1. ராஜீவ்கந்தி சாலை - விநாயக முருகன்
2.பொன்னியின் செல்வன் (மலிவு விலை பதிப்பு 300க்கு கிடைத்தது) - கல்கி
3. அராஜகம் ஆயிரம் - அராத்து
4.தற்கொலை குறுங்கதைகள் - அராத்து
5. ஓநாய் குல சின்னம் - ஜியாங் ரோங்
6. எரியும் பனிக்காடு - பி. எச். டேனியல்
7. லிண்ட்சே லோகன் W/O மாரியப்பன்- வா. மணிகண்டன்
8. நிழல்கள் நடந்த பாதை- மனுஷ்ய புத்திரன்
9. நாயுருவி - வா மு கோமு
10. காமரூப கதைகள் - சாரு நிவேதிதா
11.தேகம் - சாரு நிவேதிதா
12. கோணல் பக்கங்கள் - சாரு நிவேதிதா
13. முசோலினி - ஜனனி ரமேஷ்
14. ராஜேந்திர சோழன் - ராசசேகர தங்கமணி
15. நீங்கள் கண்காணிக்க படுகிறீர்கள் - புவனேஸ்வரி
16. ஆறாம் திணை - சிவராமன்
17.மதுமிதா சொன்ன பாம்பு கதைகள் -சாரு நிவேதிதா
18.பாஸ்வொர்ட் - கோபிநாத்
19. எனக்கு குழைந்தைகளை பிடிக்காது - சாரு நிவேதிதா
20. ராஸ லீலா - சாரு நிவேதிதா

Thursday, November 28, 2013

சென்னைக்கு மிக மிக அருகில்

விஜய் பாலிமர் டிவி நிகழ்சிகளை பார்க்கும்போது எனக்கே கொஞ்சம் குழப்பம் ஆகிறது, இன்னும் கொஞ்ச நாள் போனால் சென்னைக்கு மிக மிக அருகில் உள்ள கன்னியாகுமரியில் மனைகள் மிக கம்மியான விலைக்கு தருகிறோம்னு விளம்பரம் பண்ணுவாங்க போல.....

பல்லி விழும் பலன்

பல்லி விழும் பலன் மீது எனக்கு கொஞ்சம் நம்பிக்கை உண்டு. காரணம் எனக்கு எட்டு வயசாக இருந்த போது ஒரு முறை என் தலையில் பல்லி விழுந்தது, வந்ததே கோவம் உடனே பக்கத்தில் கிடந்த கட்டையை எடுத்து ஒரே அடி பல்லி ஸ்பாட் அவுட் ... அப்புறம் போய் காலன்டர் எடுத்து பார்த்தேன். பல்லி தலையில் விழுந்தால் உடனடி மரணம்னு போட்டிருந்தானுக .... அப்போதிலிருந்து தான் இந்த நம்பிக்கை!!!!

Wednesday, November 6, 2013

Time2Time