இதில்
பெரிய துயர் என்ன தெரியுமா!
நான் வெறுக்கவும் கூட
எனக்கு நீ மட்டும்தான் இருக்கிறாய்.
--------------------------
இந்தக் காதல்
முடிவுற்ற பிறகுதான்
நான் நம்பினேன்,
ஆம்!
நமக்குள் இருந்தது காதலேதான்.
————————————
இப்போதெல்லாம்
நீ என் காதலை
மறுப்பதுமில்லை ஏற்பதுமில்லை.
லாவகமாக ஒதுக்கக்
கற்றுக் கொண்டாய்.
ஐ லவ் யூக்களை
கண்டுகொள்ளாமல் இருக்கப்
பழகிக் கொண்டாய்.
இது இனி காதல் அல்ல
என்று நிறுவுவதில்
கவனமாக இருக்கிறாய்.
இதற்குமேல்
என்னிடம் தெம்பில்லை
—————————
ஒன்றுமில்லை
அந்த அன்பு
இன்னும் அப்படியேதான் இருக்கிறதா
என்பதைத் தெரிந்துகொள்ளத்தான்
இத்தனை பரிதவிப்பும்.
———————
அந்தவொரு முத்தத்திற்குப் பிறகு
அன்றைய நாள் முழுக்க
உன் நினைப்பாகவே இருந்தது.
இருக்கத்தான் வேண்டும்!
இல்லாவிட்டால்
அம் முத்தத்திற்கென்ன மதிப்பு
உனக்கென்ன மதிப்பு!
————————
பிரிவென்று சொல்ல
மனம் வருகுதில்லை.
உன் வாழ்க்கைக்குள்
என்னுடைய பங்கு
நிறைவு பெற்றுவிட்டது.
——————————