Wednesday, November 16, 2016

வலைபாயுதே

ஹோட்டல்ல சாப்பிட்டுட்டு 2,000 ரூபாய் கொடுத் தால், `இதுதான் ரெண்டாயிரம் ரூபாய் நோட்டா?’னு வாங்கிப் பார்த்துட்டு, `சரி காசைக் கொடுங்க’ன்றான்!



இந்தப் போர்களத்துலேயும் பெர்சனல் லோன் வாங்கிக்கச் சொல்லி செல்போனில் அழைப்பவர்களை என்ன சொல்வது? முன்வாசலில் அவ்வளவு கூட்டம் நிக்குது... பின்வாசல் வழியா கொடுப்பாங்களா?

ஒருத்தன் கேக்குறான்... `இன்னிக்கு 500, 1,000 ரூபாய்களை திருப்பதி உண்டியலில் போட்டா, அது பாவத்துல சேருமா... புண்ணியத்துல சேருமா?’ 

சுவிஸ் பேங்க்ல இருக்கிற கறுப்புப் பணத்தை மீட்கச் சொன்னா, சுருக்குப் பையில இருக்கிற பணத்தைப் புடுங்குறானுங்க!

நம்மாளுங்க 500 ஓவா நோட்டைக் கொடுத்தாலே அஞ்சாறு ஆங்கிள்ல பார்ப்பாங்க. இதுல 2,000 ஓவா நோட்டைக் கொடுத்தா இருபது ஆங்கிள்ல வெரிஃபை பண்ணுவாங்களே!

`கூட்டம் குறையட்டும் பேங்குக்குப் போலாம்’கிறது, `அலை ஓயட்டும் கடல்ல குளிக்கலாம்’ போல் ஆகிடும்னு நினைக்கிறேன் :)

என்கிட்ட இருக்கிற ரெண்டு மூணு 500 ரூபாய் நோட்டை அட்லாண்டா இந்து கோயில் உண்டியலில் போட்ருவேன். பெருமாள்: எனக்கே விபூதி அடிக்கப் பார்க்கிறல? 


நாம எல்லாரும் வருமானத்துக்கு அதிகமா கடன் வாங்குறவங்க!

பொங்கல்ல போட்ட முந்திரி, நம்ம தட்டுக்கு வரவே வராது. ஆனா, பிரியாணில் போட்ட ஒரே ஒரு ஏலக்காய் எப்பவுமே நம்ம வாய்க்குள்ளதான் மாட்டும்.
 
எதையாச்சும் சொல்லிட்டு கீழே `கலாம்'னு போட்டுட்டா நம்பிடறாய்ங்க.. :))

சாதாரண மொளகா வெடிக்கு, வண்டியை நிறுத்தி அது வெடிச்ச பிறகு வண்டியைக் கிளப்பிட்டுப் போறாங்க. இதையே சிக்னல்கள்ல ஏன்டா செய்ய மாட்றீங்க?

முட்டாளா இருக்க, அறிவு கம்மியா இருக்கணும்னு அவசியம் இல்லை; அதிக அன்பு காட்டினாக்கூட போதும்!

மகள்: பழிக்குப்பழின்னா என்னாப்பா?
நான்: நம்ம பலகாரத்தைப் பக்கத்து வீட்டுக்குக் கொடுக்கிறதும், பதிலுக்கு அவங்க பலகாரத்தை நமக்குக் கொடுக்கிறதும்தான்.

என் பாட்டி தீபாவளிக்கு மட்டும்தான் இட்லி சுடுவாங்களாம்; எங்க அம்மா தீபாவளி அன்னைக்கு மட்டும்தான் இட்லி சுட மாட்டாங்க! 

தொலைஞ்சுபோறதையே தொழிலா வெச்சிருக்கிற ஒரே பொருள்னா... அது பென்டிரைவ்தான்போல # மிடியல!

 

Sunday, July 17, 2016

பச்சை நிறமே பச்சை நிறமே

சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

பச்சை நிறமே பச்சை நிறமே இச்சை மூட்டும் பச்சை நிறமே
புல்லின் சிரிப்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
பச்சை நிறமே பச்சை நிறமே இலையின் இளமை பச்சை நிறமே
உந்தன் நரம்பும் பச்சை நிறமே எனக்கு சம்மதம் தருமே
எனக்கு சம்மதம் தருமே எனக்கு சம்மதம் தருமே

கிளையில் காணும் கிளியின் மூக்கு விடலைப் பெண்ணின் வெற்றிலை நாக்கு
புத்தம் புதிதாய் ரத்த ரோஜா பூமி தொடாத பிள்ளையின் பாதம்
எல்லா சிவப்பும் உந்தன் கோவம் எல்லா சிவப்பும் உந்தன் கோவம்
அந்தி வானம் அரைக்கும் மஞ்சள் அக்கினிக் கொழுந்தில் பூத்த மஞ்சள்
தங்கத் தோடு ஜனித்த மஞ்சள் கொன்றைப் பூவில் குளித்த மஞ்சள்
மஞ்சள் மஞ்சள் மஞ்சள்
மாலை நிலவின் மரகத மஞ்சள் எல்லாம் தங்கும் உந்தன் நெஞ்சில்

சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

அலையில்லாத ஆழி வண்ணம் முகிலில்லாத வானின் வண்ணம்
மயிலின் கழுத்தில் வாரும் வண்ணம் குவளைப் பூவில் குழைத்த வண்ணம்
ஊதாப் பூவில் ஊற்றிய வண்ணம்
எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும் எல்லாம் சேர்ந்துன் கண்ணில் மின்னும்

இரவின் நிறமே இரவின் நிறமே கார்காலத்தின் மொத்த நிறமே
காக்கைச் சிறகில் காணும் நிறமே பெண்மை எழுதும் கண்மை நிறமே
வெயிலில் பாடும் குயிலின் நிறமே
எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே எல்லாம் சேர்ந்து கூந்தல் நிறமே

சகியே ஸ்னேகிதியே காதலில் காதலில் காதலில் நிறமுண்டு
சகியே ஸ்னேகிதியே என் அன்பே அன்பே உனக்கும் நிறமுண்டு

வெள்ளை நிறமே வெள்ளை நிறமே…
மழையில் முளையும் தும்பை நிறமே…
வெள்ளை நிறமே வெள்ளை நிறமே விழியில் பாதி உள்ள நிறமே
மழையில் முளையும் தும்பை நிறமே உனது மனசின் நிறமே
உனது மனசின் நிறமே உனது மனசின் நிறமே

படம்: அலைபாயுதே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: ஹரிஹரன்,க்ளிண்டன்
வரிகள்: வைரமுத்து

Sunday, June 26, 2016

தள்ளி போகாதே

ஏனோ வானிலை மாறுதே...
மணித்துளி போகுதே...
மார்பின் வேகம் கூடுதே...
மனமோ ஏதோ சொல்ல
வார்த்தை தேடுதே.....
கண்ணெல்லாம் நீயேதான் நிற்கின்றாய்....
விழியின் மேல் நான் கோபம் கொண்டேன்....
இமை மூடிடு என்றேன்....
நகரும் நொடிகள்.....
கசையடி போலே
முதுகின் மேலே
விழுவதினாலே...
வரிவரிக் கவிதை
எழுதும் வலிகள்
எழுதா மொழிகள்....... எனது...!.
கடல் போலப் பெரிதாக நீ நின்றாய்.....
சிறுவன் நான்,
சிறு அலை மட்டும்தான்....
பார்க்கிறேன்...... பார்க்கிறேன்......!
எரியும் தீயில் எண்ணெய் நீ ஊற்று...
நான் வந்து நீராடும் நீரூற்று !.
ஓ ஓ ஓ
ஊரெல்லாம் கண்மூடித் தூங்கும்
ஓசைகள் இல்லாத இரவே.....!
ஓ ஓ ஓ
நான் மட்டும் தூங்காமல் ஏங்கி
உன்போலக் காய்கின்றேன் நிலவே......!
கலாபம் போலாடும் கனவில் வாழ்கின்றேனே....!
கை நீட்டி..... உன்னைத்...
தீண்டவே பார்த்தேன்...
ஏன் அதில் தோற்றேன்...?
ஏன் முதல் முத்தம்
தரத் தாமதம் ஆகுது....?
தாமரை வேகுது....
தாமரை வேகுது....
தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.....!
தள்ளிப் போகாதே....
எனையும் தள்ளிப் போகச்
சொல்லாதே....
இருவர் இதழும்
மலர் எனும் முள்தானே.......!
தேகம் தடையில்லை... என நானும்
ஒரு வார்த்தை சொல்கின்றேன்....
ஆனால் அது பொய்தான்... என நீயும்
அறிவாய் என்கின்றேன்....
அருகினில் வா.....!
(அடுக்கிசை)
கனவிலே தெரிந்தாய்
விழித்ததும் ஒளிந்தாய்
கனவினில் தினம் தினம் மழைத்துளியாய்ப் பொழிந்தாய்!
கண்களில் ஏக்கம்
காதலின் மயக்கம்
ஆனால் பார்த்த நிமிடம் ஒருவிதமான தயக்கம்
நொடி நொடியாய் நேரம் குறைய
என் காதல் ஆயுள் கரைய
ஏனோ ஏனோ மார்பில் வேகம் கூட
விதியின் சதி விளையாடுதே
எனை விட்டு பிரியாதன்பே.... எனை விட்டு பிரியாதன்பே
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ
அன்பே..

Sunday, April 3, 2016

வலைபாயுதே

அவ்வளவு செஞ்ச போதி தர்மராலேயே வழுக்கமண்டைக்கு மருந்து கண்டுபிடிக்க முடியல... ஸோ ஸேட்!

 இந்த `வெண்மதி வெண்மதியே நில்லு...' பாட்டைக் கேட்டாலே, 2 மி.மீ தாடி வளந்துருது!

 `மங்காத்தா'வுல வருவது மாதிரி ஏதாவது கன்டெய்னர் போகுதானு பார்த்துச் சொல்லுங்கப்பு. ஸ்கூல் ஃபீஸ் கட்டணும்!

‘வீடு வாங்கியிருக்கேன்’, ‘காரு வாங்கியிருக்கேன்’னு சொல்றாங்க. ஆக்சுவலி நீங்க எல்லாம் கடன் வாங்கியிருக்கீங்க மக்கா!

  கிரிஸ்கெயில் அடிக்கிற சிக்ஸருக்கு எல்லாம் தாராளமா எட்டு ரன்கள் தரலாம்!

ட்விட்டரை டி-ஆக்ட்டிவேட் பண்ணவே நமக்கு யோசனையா இருக்கு! நாட்ல எப்படி தற்கொலை எல்லாம் பண்றாங்க?

என்னை நானே கதறக்கதற அடிச்சு, மிதிச்சு, தரதரனு இழுத்துட்டுப்போறேன்... ஆபீஸுக்கு!

மூடநம்பிக்கைனு தெரிஞ்சாலும் யாராவது நமக்கு `கண்ணுபட்டுடும்'னு சொல்றப்ப குஷியா இருக்கு.

சொந்த தாய்மாமன் குடும்பம் நம்ம வீட்ல இருக்கும்போது, மத்தவங்ககிட்ட `கெஸ்ட் வந்திருக்காங்க’னு சொல்ற அளவுக்கு நம்ம சமூகம் வளர்ந்து நிக்குது.

நம்மூர்லதான்டா ஒன்வேயிலகூட ரெண்டு பக்கங்களும் பார்த்து கிராஸ் பண்ணவேண்டியிருக்கு.

சாராயம் வித்த அரசுக்கே இவ்வளவு கடன்னா... குடிச்ச மக்களுக்கு எவ்வளவு கடன் இருக்கும்?!

`இல்லை’ என்பதைவிட `இருந்தது’ என்பது வலிமிக்கது!

எல்லா பசங்களும் ‘சிங்கிள்’னு அழுவுறாங்க. எல்லா பொண்ணுங்களும் ‘committed’னு சொல்றாங்க. என்னடா நடக்குது இங்கே... ஒண்ணும் புரியலை. யாரு, யாரைத்தான் லவ் பண்றீங்க?

பெண்கள், ஸ்கூட்டியை வீட்டில் இருந்து வாசலுக்குக் கொண்டுவரும் அழகு இருக்கே... அட அட அட... குடிகாரன் தோத்துருவான்!

டாஸ்மாக் வாசலில் மல்லாந்து விழுந்துகிடப்பவனை `எந்திரி’ என்போம்; அம்மா காலடியில் குப்புற விழுந்துகிடப்பவனை `மந்திரி’ என்போம்!

பொண்டாட்டி அழறதைப் பார்த்தா புருஷனுக்குக் கோபம் வருது; புருஷன் சிரிக்கிறதைப் பார்த்தா பொண்டாட்டிக்குக் கோபம் வருது... #என்ன வாழ்க்கைடா!

வர்றவன் பூராம் லெக்பீஸாவே கேட்டா, `பூரான் பிரியாணி’ தான்டா செய்யணும்!

மக்கள் நலக் கூட்டனி

மக்கள் நலக் கூட்டனியை சுருக்கமாக மநகூ என்று சொன்னார்கள். இப்போது அது கேப்டன் நலக் கூட்டனியாகிவிட்டது. இனிமே எப்படி கூப்பிடுவார்கள்?????

தமிழ் நாடு முன்னேறனும்னா

தமிழ் நாடு முன்னேறனும்னா தி.மு.க ஆ.தி.மு.க வ ஒழிக்கறதுக்கு முன்னாடி இந்த விஜய் டீவிய ஒழிக்கனும்....