Saturday, August 5, 2017

என் கோபம்

என் கோபமெல்லாம் உன் நிராகரிப்பின் மீதல்ல, முற்றிலுமாய் வெறுத்தொதுக்காமல் வழங்கிய சிறுஅன்பின் மீதே

இவகூட ஒரு நிமிசம் கூட வாழ முடியாதுன்னு கதற வைக்கணும். அடுத்த நொடியே, இவளில்லாம ஒரு நிமிசம் கூட வாழ முடியாதுன்னு பதற வைக்கணும். அதான்

பாதிக்கப்பட்டவங்க

துரோகமிழைக்கப்பட்டவர்கள்
அநீதியிழைக்கப்பட்டவர்கள்
நம்பி ஏமாந்தவர்கள்
காதலில் தோற்றுப்போனவர்கள்
வாழ்வில் விரக்தி அடைந்தவர்கள்
எல்லாரும் நேரா சமூகவலைத்தளத்திற்கு தான் வருவார்கள் போல... ஒக்காலி நாட்ல யாரும் நிம்மதியா இல்ல... எல்லாருமே பாதிக்கப்பட்டவங்களா தான் இருக்காங்க.. அப்ப யாருதான்டா பாதிப்ப ஏற்படுத்தறது?

உனக்காக

உன்னிடம் என்னைத் தூக்கியெறிகிறேன்
உனக்காக என்னையும் தூக்கியெறிவேன்.

டிசைன்!

யார் கையில் கொடுத்தால்... பிராண்டி வச்சு... சுக்குநூறா கிழிச்சு.. தூக்கிப்போட்டு மிதிச்சு.. சல்லிசல்லியா நொறுக்கிப் போடுவாங்களோ.. அவங்க கைல தான் மனசக் கொடுப்போம்.. ஏன்னா அதான் டிசைன்

அவளொரு தோழி

அவளொரு தோழி
நெருங்கிய தோழி
முத்தம் பகிர்வாள்
கட்டியணைப்பாள்
நடுச்சாமத்தில் அரைநிர்வாணப்படம் அனுப்புவாள்
தீரா வெக்கையை பேசியே தீர்ப்போம்............
''நண்பா கொஞ்சம் நிறுத்து!''
என்னதான் சொல்ல வருகிறாய்?
நீ சொல்வது உன் வெளிப்படை அல்ல
நட்பில் இப்படியும் இருக்கலாமெனும் தூண்டல்
ஒருத்தி அப்படியிருந்தால்
எல்லாவளும் அப்படியேயிருப்பாளா என்ன?
நட்பில் காமம்
தேவையில்லை
அவசியமில்லை
கட்டாயமில்லை
தப்புமில்லை
நிகழ்ந்தால் நிகழட்டும்
நிகழ்த்த முனையாதே
முனைதல் காதலின் குணம்..
நட்பென்பது... இந்தா கைகள்... பிடித்துக்கொள்!