Monday, June 26, 2017

காதலன் – என்னவளே

படம் : காதலன்
பாடல் : என்னவளே
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று
கழுத்து வரை இன்று காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று
வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும்
உருலுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும்
தோன்றுதடி – இது
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி – நான்
வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி…
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக்
கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூங்தலில்
மீன் பிடிப்பேன்
வென்னிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு
சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி
அனுப்பிவைப்பேன் – என்
காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் – உன்
காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்றுரைப்பேன்…
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்

No comments: